×

பி.எட் பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்விதுறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2020-21ம் கல்வியாண்டிற்கான இளங்கலை கல்வியியல் (பி.எட்)   பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக வரும் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை www.tngasaedu.in   என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப கட்டணமாக ரூ.500 ஐ செலுத்தி பதிவு செய்யலாம். எஸ்.சி / எஸ்.டி விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.250 ஐ  மட்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப் படி கல்லூரிகளை தேர்வு செய்ய  வேண்டும்.  மேலும் விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை மேற்கூறிய இணையதள முகவரியில்  பதிவேற்றம் செய்தல் வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் 044-22351014,   044-22351015 மற்றும் 044-28278791 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம்.



Tags : Announcement ,Minister , Apply Online for B.Ed Degrees: Announcement by the Minister of Higher Education
× RELATED திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல்...