×

தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கான நிலம் கையகப்படுத்துவதில் உச்சவரம்பு உயர்வு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: தமிழக அரசு ஆலை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களுக்காக புன்செய் நிலங்கள் 120 ஏக்கர், நன்செய் நிலங்கள் 60 ஏக்கர் வரை அரசின் முன் அனுமதியின்றி, தனியாரிடம் இருந்து ஆலை நிர்வாகங்கள் வாங்கிக்கொள்ளலாம். வருவாய் துறையின் கீழ் வரும் நில நிர்வாக துறை வெளியிட்டுள்ள இந்த அரசாணை குறித்து தொழில்துறை அதிகாரிகள் குறிப்பிடுகையில், தமிழகத்தில் 2ம் நிலை, 3ம் நிலை நகரங்களில் தற்போது தொழிற்சாலை அமைக்க பல நிறுவனங்கள் விரும்பும் நிலையில், தமிழக அரசு நில உச்சவரம்பை உயர்த்தியுள்ளது. இதனால் தொழிற்சாலைகள் அதிக அளவில் பயன்பெறும். குறிப்பாக தொழிற்சாலைகள் விரிவாக்கத்துக்கான நிலங்கள் கையகப்படுத்தும்போது முன்பெல்லாம் 100 ஏக்கர் என்றால் அரசின் முன் அனுமதி பெற வேண்டும். தற்போது இந்த உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.

Tags : Raising the ceiling on land acquisition for start-ups
× RELATED பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி...