×

மண்ணடியில் 6 பேர் கைது ஹவாலா பணம் ரூ.2 கோடி பறிமுதல்?

தண்டையார்பேட்டை: மண்ணடி மாஸ்கன்சாவடியை சேர்ந்தவர் திவான் அக்பர் (45). இவர் செம்மரக்கடத்தல், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் என கூறப்படுகிறது. தற்போது ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவருக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தவ்பீக் என்பவருக்கும் பண பிரச்னை இருந்தாக கூறப்படுகிறது. தவ்பீக் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி தவ்பீக் தலைமையிலான கும்பல் ரூ.2 கோடி கேட்டு திவான் அக்பரை காரில் கடத்தி சென்று வடபழனி, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் அடைத்து வைத்து, அடித்து உதைத்தது.

பின்னர் திவான் அக்பர் வீட்டில் இருந்து ரூ.2 கோடி வந்தவுடன், அவரை அந்த கும்பல் கிழக்கு கடற்கரை சாலையில் விட்டுவிட்டு சென்றது. இதையடுத்து, புகார் எதுவும் கொடுக்காமல் திவான் அக்பர் வீட்டில் இருந்தார். முத்தியால்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிந்து விசாரித்தபோது திவான் அக்பர் நடந்த சம்பவத்தை விளக்கினார். இதுதொடர்பாக ஆல்பர், உமா மகேஸ்வரன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து, தலைமறைவாக உள்ள தவ்பீக் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 கோடி ஹவாலா பணமா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Mannadi, 6 arrested, hawala money, Rs 2 crore, confiscated?
× RELATED ‘மாமா என்று அழைக்க வேண்டும்’ என இளம்பெண்ணை சீண்டிய வாலிபர் கைது