×

திருப்பதியில் விஐபி தரிசன டிக்கெட் முன்பதிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீவாணி அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரூ.10,000 நன்கொடை வழங்கும் பக்தர்கள், ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, செப்டம்பருக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும், நேரடியாகவும் 100 டிக்கெட் வரை தி்னமும்  முன்பதிவு செய்து கொள்ளலாம். பிரமோற்சவ நாட்களில் 19, 23ம் தேதிகளில் நன்கொடை பக்தர்களுக்கான விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும். நன்கொடை அளித்த பக்தர்கள் ஒரு வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் ஒருமுறை விஐபி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள். கூறியுள்ளனர்.

Tags : Tirupati ,VIP Darshan , Tirupati, VIP Darshan Ticket, Booking
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...