×

2 மருத்துவமனைகளுக்கு ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் 50 லட்சம் நிதியுதவி

சென்னை: கொரோனா தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் சமூகத்திற்கு உதவும் வகையில் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் சார்பில், சென்னை அடையாறு புற்றுநோய் மையம் மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு தலா ₹25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜிஆர்டியின் மேலாண்மை இயக்குனர் ஜி.ஆர்.‘ஆனந்த்’ அனந்த பத்மநாபன் கூறுகையில், ‘‘அடையாறு புற்றுநோய் மையமும், சங்கர நேத்ராலயாவும் பின்தங்கிய நிலையில் உள்ள எளியோருக்கு கட்டணம் இல்லாமல் சேவை மனப்பான்மையில் சிகிச்சை அளித்து வருகின்றன.

அவர்களின் சேவைக்கு துணை நிற்கும் விதமாக மேற்கண்ட இரு நிறுவனங்களுக்கும் ஏற்கனவே தலா 1 கோடி வழங்கியுள்ள நிலையில், இந்த தருணத்தில் மேலும் உதவுவதை கடமையாக கருதுகிறோம்,’’ என்றார். ஜிஆர்டியின் மேலாண்மை இயக்குனர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இந்த நிதியுதவி சமூகத்திற்கு திருப்தி அளிக்கும் தார்மீகமாக மட்டுமல்லாமல், எங்களுக்கு வாடிக்கையாளர்கள் அளித்துவரும் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி கடனாகவும் கருதுகிறோம்,’’ என்றார்.

Tags : hospitals ,GRT Jewelers , 2 Hospitals, GRT Jewelers, sponsored
× RELATED டெல்லியில் உள்ள 4 தனியார்...