செய்யூர்: பவுஞ்சூரில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்கள் வினியோகிக்கப்பட்டன. செய்யூர் அருகே பவுஞ்சூர் பஜார் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், திருவத்தூர், பவுஞ்சூர் பகுதி எஸ்டிபிஐ கட்சியின் கிளை செயலாளர் முஹமது ஆஷிக் தலைமை தாங்கினார். கட்சி செய்யூர் தொகுதி தலைவர் அசாருதீன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அணைக்கட்டு காவல்துறை துணை ஆய்வாளர் வாசுதேவன், பவுஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களை வழங்கினர். நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகிகள் ஜுபைர் அலி, முகமது சுலைமான், கிளை துணை தலைவர்கள் முகமது முஸ்தபா, முகமது இல்யாஸ், அப்பாஸ், ஜாகிர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.