- சென்னை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வு
- வென்னிலா
- சென்னை செயலகம்
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், எழுத்தாளரும் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையின் உதவி பதிப்பாசிரியருமான வெண்ணிலா தொகுத்த ‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக்கொண்டார். இந்நூல் தொகுப்பு, தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்றுத் துறையின் சார்பில் வெளியாகிறது. இந்நூல், 1927ம் ஆண்டு சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தி ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் 1967ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள், இந்தியை கட்டாயமாக்க அன்றைய ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்த தொடர் முயற்சிகள், அரசின் முயற்சிகளை முறியடிக்க சுயமரியாதை இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்ச் சங்கங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழார்வலர்கள் முன்னெடுத்த போராட்டங்கள், காலவாரியாக தொகுக்கப்பட்ட ஆவணங்களின் அட்டவணை.
