×

ஆஹா... ஆரம்பிச்சுட்டங்கய்யா கள்ளச்சந்தையில் கொரோனா மருந்து

திருமலை: கொரோனா நோயை குணமாக்க, இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே, மற்ற நோய்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருந்துகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளை சில மருத்துவ பிரதிநிதிகள் கள்ளச்சந்தையில் கொள்ளை லாபத்துக்கு விற்று வருவதாக ஐதராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் விரித்த வலையில் மருந்து பெட்டிகளுடன் இருந்த 8 பேர் சிக்கினர்.  

இவர்கள் சர்வதேச அளவில் ‘மருத்துவ மாபியா’ போன்று கள்ளச்சந்தையில் அரிய மருந்துகளை கடத்தி விற்பனை செய்வதும், தற்போது கொரோனா தடுப்பு மருந்துகளை விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள பேபிப்ளூ, ஸ்டாண்டர்ட் குகோவிட் -19, எல்ஜிஎம் மற்றும் ரெம்டெசிவர் போன்ற மருந்துகளையும், கொரோனா தொற்றை கண்டறியும், ‘ரேபிட் கிட்’ உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ‘‘இந்த மருந்து மாபியா கும்பல், ரூ.4,500 மதிப்புள்ள கெரோனா ஊசியை ரூ.40 ஆயிரத்திற்கும், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மருந்துகளை ரூ.50,000க்கும் விற்றுள்ளனர்,’’

Tags : Aha ,Corona ,start , Aha ... arampichuttankayya, black market, corona medicine
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...