×

பிரபல ரவுடிக்கு குண்டாஸ்

செய்யூர்: சூனாம்பேடு பகுதியில், தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடியை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். சூனாம்பேடு நடு தெருவை சேர்ந்தவர் ரங்கையன் (30). பிரபல ரவுடி. இவர் மீது சூனாம்பேடு காவல் நிலையத்தில் ஒரு கொலை, 5 கொலை முயற்சி, அடிதடி, சாராயம் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பலமுறை சிறை சென்று வந்துள்ளார். கடந்த ஜூன் 29ம்  தேதி, ஒரு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட ரங்கையன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரங்கையனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி கண்ணன், கலெக்டர் ஜான்லூயிசுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags : Rowdy , Famous, Rowdy, Kundas
× RELATED கந்தசஷ்டி விவகாரம் கருப்பர்...