சென்னை: இந்திய மருத்தவ ஆராய்ச்சி கழக பரிந்துரையின் பேரிலேயே கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மக்களுக்கு தரப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. உயர்நீதிமன்ற கிளையில் விசாரணையின் போது தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தும் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது என்று அரசு கூறியுள்ளது.