சென்னை: சென்னையில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார். கொரோனா தொற்று குறித்து 100 சதவீத விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்த அவர் திருவிக நகரில் 7 லட்சம் மக்கள் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.