×

உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தான கவுடர் மரணம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம்.சந்தான கவுடர் நுரையீரல் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 62. நுரையீரல் தொற்று காரணமாக குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் நீதிபதி சதானந்த கவுடர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவருடைய உடல்நிலை மோசமானது. இதனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை அவர் இறந்தார். டெல்லியில் கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், நீதிபதி சந்தான கவுடர் மரணம் அடைந்துள்ளார். ஆனால், அவரது மறைவுக்கு கொரோனாதான் காரணமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. கர்நாடகாவில் பிறந்த சந்தான கவுடர், அம்மாநில உயர் நீதிமன்றத்தில் கடந்த 2003ம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2017ம் ஆண்டு, பிப்ரவரியில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்….

The post உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தான கவுடர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Justice Santana Gowder ,New Delhi ,Justice ,Mohan M. Chandana Gowder ,Santana Gowder ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு