×

திருவிக நகர், தண்டையார்பேட்டையில் 4 கர்ப்பிணிகள் உள்பட 37 பேருக்கு கொரோனா

பெரம்பூர்: கொரோனா பாதிப்பில் திருவிக நகர் மண்டலம் 3வது இடத்தில் உள்ளது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் நிறைமாத கர்ப்பிணி, நுண்ணறிவு பிரிவு காவலர் உட்பட 37 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.புளியந்தோப்பு பி.கே காலனியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி, குட்டி தம்புரான் தெருவை சேர்ந்த ஒருவர், திருவிக நகரை சேர்ந்த 49 வயது நபர், ஓட்டேரி பட்டாளம் பகுதியில் வசிக்கும் நுண்ணறிவு பிரிவு காவலர், வெங்கடேசன் தெருவை சேர்ந்த 75 வயது மூதாட்டி, பிஎஸ் மூர்த்தி  நகரை சேர்ந்த ஒருவர், நியூ பேரன்ஸ் சாலையை சேர்ந்த 10 வயது சிறுவன் ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதேபோல், தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதிக்கு எல்லைக்கு உட்பட்ட சங்கரபத்தன் தெருவை சேர்ந்த 38 வயது நபர், அவது குடும்பத்தை சேர்ந்த 7 பேர், சுப்புராயன் 3வது தெருவில் வசிக்கும் 9 மாத கர்ப்பிணி மற்றும் குன்னூர் நெடுஞ்சாலையில் வசிக்கும் 27 வயது நபர்,  பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி 19வது தெருவில் வசிக்கும் 57 வயது நபர் மற்றும் அயனாவரம் பகுதியில் வசிக்கும் 20 வயது ஆண் என திருவிக நகர் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் 20 வயதுடைய 9 மாத கர்ப்பிணி, சாமந்திப்பூ காலனியில் 29 வயதான 9 மாத நிறைமாத கர்ப்பிணி, எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 7 பேர், கொடுங்கையூர் காவல் நிலையத்திற்க்கு உட்பட் பகுதியில் 5 பேருக்கும் கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது.

அதிமுக கவுன்சிலருக்கு கொரோனா
பல்லாவரம் கன்டோன்மென்ட், மாரியம்மன் கோயில் 3வது தெருவை சேர்ந்த 53 வயது நபர், கன்டோன்மென்ட் 6வது வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இவர் கடந்த சில தினங்களாக நிவாரண பொருட்கள் வழங்கி வந்தார். இந்நிலையில், இவருக்கு சளி, இருமல் இருந்ததால், சுகாதாரத்துறை அதிகாரிகள் இவருக்கு ரத்த பரிசோதனை செய்தனர். அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே நிவாரண பொருட்கள் வழங்கிய அவர், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களிடம் நேரடி தொடர்பில் இருந்ததால், சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை அடையாளம்


Tags : Corona ,persons ,women ,Thiruvika Nagar Thiruvika Nagar , Thiruvika Nagar, Thindyarpet, 4 pregnant, corona
× RELATED சர்ச்சைப் பேச்சு: மகாவிஷ்ணுவுக்கு மாற்றுத்திறனாளி ஆணையரகம் நோட்டீஸ்