×

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆல்ப்ஸ் மலையில் ஒளி ஓவியம் : நன்றி தெரிவித்த இந்தியா

சுவீடன் : கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மின்னொளியால் இந்திய தேசியக் கொடி ஒளிபரப்பப்பட்டது. உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனிடையே சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறை சார்பில் ஆல்ப்ஸ் மலையில் உள்ள மேட்டர்ஹார்ன் மலை உச்சியில் மார்ச் மாத இறுதியில் இருந்து நாள்தோறும் ஒவ்வொரு நாட்டின் தேசியக் கொடியும் மின்னொளியால் காட்டப்படுகிறது.

ஒளி ஓவிய வல்லுநர் கெரி ஹாப்ஸ்டெட்டர் இந்தப் பணியைச் செய்து வருகிறார். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியர்களுக்கு நம்பிக்கையும் வலிமையும் தரும் வகையில் நாலாயிரத்து நானூறு மீட்டர் உயரத்தில் இந்தியத் தேசியக் கொடியை அவர் ஒளிரவிட்டுள்ளார். இதற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியும் அந்த புகைப்படத்தை டேக் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனாவுக்கு எதிராக உலகமே போரிட்டு வருவதாகவும், இந்தத் தொற்றுநோயை மனிதநேயம் வெல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : India ,War Against Corona , Corona, War, India, Support, Mountains of the Alps, Light, Painting, Thank You
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...