×

விதி மீறி கட்டப்பட்ட கட்டிடம் அடுக்குமாடி குடியிருப்பின் 2 தளங்களுக்கு சீல்: மயிலாப்பூரில் சிஎம்டிஏ அதிரடி

சென்னை: மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 2 தளங்களுக்கு சி.எம்.டி.ஏ அதிகாரிகள் சீல் வைத்தனர்.  மயிலாப்பூர், சாந்தோம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு, சி.எம்.டி.ஏ விதிகளை மீறியும், கட்டிடத்தை கட்ட வழங்கப்பட்ட அனுமதியை மீறியும் 4 மற்றும் 5வது தளங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. கட்டிடம் கட்டும் போது கடந்த 2015ம் ஆண்டு அந்த திட்டத்துக்கு சிஎம்டிஏ அனுமதி மறுத்துள்ளது. இருந்தும் தடையை மீறி கட்டிடம் கட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதன்படி சிஎம்டிஏ அதிகாரிகள், கட்டிடம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பினர். இதனைதொடர்ந்து, கட்டிடத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கட்டிடம் வழங்கப்பட்ட அனுமதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது என்று தெரியவந்தது. அதன்படி சோதனை செய்த அதிகாரிகள் கட்டிடத்தில் உள்ள 4 மற்றும் 5வது தளங்களுக்கு சீல் வைத்தனர்.

அந்த தளத்தில் மொத்தம் 12 வீடுகள் உள்ளது. அதில், உள்ளவர்களை உடனடியாக காலி செய்யும்படியும் உத்தரவிட்டனர். இருந்தும் 6 வீடுகளுக்கு பூட்டுபோடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து மீதம் உள்ளவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். இதனால் அதிகாரிகள் அந்த வீடுகளை பூட்டவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : building ,Mylapore ,Apartment building ,Luz , Apartments, Seal, Mylapore, CMDA
× RELATED சென்னை மயிலாப்பூரில் அஜய் என்பவரின்...