×

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்: காவிரியில் உற்சாக பரிசல் சவாரி

பென்னாகரம்: ஒகேனக்கல்லில் நேற்று குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், காவிரியில் உற்சாகமாக பரிசல் சவாரியும் மகிழ்ந்தனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வார விடுமுறையையொட்டி நேற்று ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் பரிசல் சவாரி செய்து மெயின் அருவியை கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து, எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயினருவியில் குளித்தனர். பின்னர், முதலைப் பண்ணை, மீன் பண்ணை மற்றும் இதர இடங்களை கண்டு களித்தனர். மேலும், மீன் குழம்பு, வருவலுடன் விருந்து உண்டு மகிழ்ந்தனர். ஒகேனக்கல்லில் ஒரேநாளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்ததால், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர். அதே நேரத்தில் வாகன நிறுத்த இடம் இல்லாததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags : Kaveri ,gift ride , Okenakal, tourists
× RELATED தரிசாக கிடக்கும் ஆற்றுப்பாசன வயல்கள்...