×

அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களில் பனிப்புயல்: புளோரிடா, கரோலினா மாகாணங்களில் கடும் பாதிப்பு

புளோரிடா: அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களில் கடந்த 4 நாட்களாக நீடிக்கும் பனிப்புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோலினா, புளோரிடா மாகாணங்களில் கடந்த 4ம் தேதியில் இருந்து கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. பனிப்புயலில் சிக்கி ஆயிரக்கணக்கான வீடுகள், வணிக வளாகங்கள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இருளில் தவித்து வருகின்றனர். பல்வேறு மாகாணங்களில் கனமழையும் கொட்டி வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தெற்கு கரோலினாவில் பல இடங்களில் குடியிருப்புகளில் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. கனமழை மற்றும் பனிப்புயல் காரணமாக பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கரோலினாவில் சூரைக்காற்றுடன் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


Tags : states ,United States ,Florida ,Blizzard ,provinces ,Carolina , United States, Southeastern Provinces, Blizzard, Florida, Carolina
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!