×

பழுதடைந்த தார்ச்சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பந்தலூர்: பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா போலீஸ் ஸ்டேஷன் அருகே இருந்து காட்டி மட்டம் செல்லும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள தார்சாலை தற்போது பழுதடைந்து குண்டும் குழியுமாக  உள்ளது. ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அப்பகுதிக்கு சென்றுவர முடியாத நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஆதிவாசி மக்கள் உள்ளிட்ட  நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர் அன்றாடம் கூலிகள் சிறு குறு விவசாயிகள் நிறைந்த இப்பகுதியில் பழுதடைந்த சாலையை பயன்படுத்த முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் பழுதடைந்த தார்ச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி இப்பகுதி மக்கள் நெல்லியாளம் நகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு புகார்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நிறைந்த இப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்கு வாகனங்கள் சென்று வர இயலாததால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் மழைநீர் சூழ்ந்து காணப்படுவதில் வாகன ஓட்டிகள் மேலும் சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள்  நடந்து செல்லமுடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராமமக்கள் தெரிவித்தனர். தார்ச்சாலையை சீரமைக்காவிட்டால் கிராமமக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Tags : roads , Tarchalai, villagers, demand
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...