×

வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

சென்னை: வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கார்த்தி சிதம்பரம், மனைவி  தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுக்களை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அடுத்த விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2015-2016 ஆண்டிற்கான வருமானத்தை மறைத்ததாக முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது வழக்கு தொடரப்பட்டது. சென்னை அடுத்த முட்டுக்காட்டில் தங்களுக்கு சொந்தமாக இருந்த நிலத்தை விற்ற வருமானத்தை மறைத்ததாக கார்த்தி சிதம்பரம் மீது புகார் எழுப்பப்பட்டது.

ஒரு ஏக்கர் ரூபாய் 4 கோடி 25 லட்சம் என்ற விலையில் அக்னி எஸ்டேட் பவுன்டேசனுக்கு நிலத்தை கார்த்தி விற்றதாக கூறப்படுகிறது. ஆனால் விற்பனை ஒப்பந்தத்தில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலையை ரூபாய் 3 கோடி என்று குறிப்பிட்டு உள்ளதாக கார்த்தி மீது வருமான வரித்துறை புகார் தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் இருந்து கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஸ்ரீநிதியை விடுவிக்க முடியாது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Tags : Karthi Chidambaram ,Srinidhi ,release , Income, Litigation, Karthi Chidambaram, Srinidhi, Filing, Petitions, Dismissal
× RELATED ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது: கார்த்தி சிதம்பரம்