×

பேட்டையில் பல்லாங்குழி சாலையால் பறிபோகும் உயிர்கள்: அதிகாரிகள் பாராமுகம்

பேட்டை: பேட்டையில் பல்லாங்குழி சாலையால் உயிர்பலியாகும் அவலம் தொடா்கிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. நெல்லை அடுத்த பேட்டை பகுதி பல்வேறு அடிப்படை வசதிகளை உள்ளடக்கியதால் நாளுக்குநாள் வளா்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் வாகன எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் இப்பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி குறுகிய சாலையாக மாறி வருவதால் நாளுக்குநாள் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விபத்து அதிகரித்து கொண்டே செல்கிறது.  இந்நிலையில் பேட்டை சேரன்மகாதேவி சாலை, டவுன் காட்சி மண்டபம், குளத்தாங்கரை பள்ளிவாசல், பேட்டை மாநகராட்சி மருத்துவமனை, பேட்டை சிப்காட் வங்கி அருகே துவங்கி ஜடிஜ வரையிலான சாலை, மில்கேட் கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் பெரும் பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனை சீரமைத்திட வலியுறுத்தி தமிழ்முரசு நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. சீரமைப்பு பணி தொய்வால் இப்பள்ளங்களில் தொடா் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் காயமடைந்து வருகின்றனர். உயிர் பலியும் அரங்கேறி வருகிறது.

கடந்த 1ம்தேதி கொண்டாநகரம் ராஜீவ் காந்தி நகரை சோ்ந்த கணேசன் அவரது மனைவி சாந்தி (45) ஆகிய இருவரும் பைக்கில் டவுனுக்கு சென்று கொண்டிருந்தனா். பேட்டை மாநகராட்சி மருத்துவமனை அருகே வந்த போது வண்டியின் குறுக்கே வந்தவா் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது அந்த பகுதியில் இருந்த மேடு பள்ளமான சாலையில் தடுமாறி கீழே விழுந்ததில் சாந்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், இறந்தார். மேலும் அதே பகுதியில் சூரசம்ஹார நிகழ்வு பாா்க்க  தந்தையுடன் பைக்கில்  சென்ற பள்ளி மாணவன் விபத்தில் சிக்கி பலியானாா். எனவே தொடா்ந்து உயிர்பலி வாங்கி வரும் சாலையை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Tags : bait road , Hood, road, officers, bargain
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு பணம் தராத பா.ஜ.க....