×

தொடர்ந்து 9வது மாதமாக மாருதி சுசூகி கார் உற்பத்தி குறைப்பு

புதுடெல்லி: மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து 9வது மாதமாக, கடந்த அக்டோபரில் உற்பத்தியை 20.7 சதவீதம் குறைத்துள்ளது. வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் ஆட்டோமொபைல் துறை பின்னடைவில் இருந்து மீள இயலவில்லை. இதனால் உற்பத்தி நிறுவனங்கள், டீலர்கள், உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றிய பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்குவதால் நிறுவனங்கள் வாகன உற்பத்தியை குறைத்து வருகின்றன.

இந்த வகையில், மாருதி சுசூகி நிறுவனம் கடந்த அக்டோபரில் 1,19,337 கார்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதம் இந்த எண்ணிக்கை 1,50,497 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் உற்பத்தி 20.7 சதவீதம் சரிந்துள்ளது. இந்த நிறுவன பயணிகள் வாகன விற்பனை 20.85 சதவீதம் குறைந்து 1,17,383 ஆக உள்ளது. மினி மற்றும் காம்பாக்ட் ரக கார்களான ஆல்டோ, நியூ வேகன் ஆர், செலரியோ, இக்னிஷ், ஸ்விப்ட் உள்ளிட்ட பிரிவில் 85,064 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 21.57 சதவீத சரிவாகும். 


Tags : Maruti Suzuki , Maruti Suzuki Car, production cut
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...