×

பண்ருட்டி தொகுதியில் தேர்தல் முடிவை மாற்ற சதி தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும்: வேல்முருகன் கோரிக்கை

சென்னை: பண்ருட்டி தொகுதியில் தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது. இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வேல்முருகன் கூறியதாவது: நான் போட்டியிட்ட பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வாக்கு இயந்திரங்கள் சீலிட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகத்தில் நுழைய, கணினி துறையில் நிபணத்துவம் பெற்றவர்களுக்கு சிறப்பு அனுமதி பாஸ் நேற்று பண்ருட்டி தொகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இது குறித்த புகாரை தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளேன். மீண்டும் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டபோது 3 கணினி நிபுணர்களுக்கான அனுமதி பாஸ் ரத்து செய்யப்படும் என்று உறுதி அளித்தார். துணை ராணுவப்படை காவல் இருக்கும் போது வேட்பாளரான என்னுடைய அல்லது என் முகவரின் அனுமதி இல்லாமல் வாக்கு இயந்திரம் இருக்கும் அறைக்கு அருகாமையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாடு அறைபோல் ஒரு அறையை உருவாக்கி அதில் கணினி துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை அமர்த்தி பணி செய்ய உத்தரவிட்டது யார்?. என்னுடைய தொகுதியில் மட்டும் ஆன்லைன் பாடங்களை நடத்த உயர்கல்வித்துறை ஆணையிட்டதா?. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியும், உயர்கல்விதுறை செயலாளரும் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் செயலாளர் பொறுப்பில் இருக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். மேலும் என் தொகுதியில் சில காவலர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக வேலை செய்துவருகின்றனர். என் ஆதரவார்களை தொடர்ந்து மிரட்டும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பாஜ அரசை தொடர்ந்து நான் விமர்சித்து வருவதால், என்னை சட்டமன்றத்திற்குள் நுழையவிடக்கூடாது என்னை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சியும், மத்திய பாஜ அரசும் தொடர்ந்து சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  …

The post பண்ருட்டி தொகுதியில் தேர்தல் முடிவை மாற்ற சதி தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும்: வேல்முருகன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,PANRUTI ,Velmurugan ,Chennai ,Pannruti ,Tamil Nadu ,Chief Election Officer ,Velmrugan ,
× RELATED தபால் ஓட்டுகளின் முடிவை முதலில்...