×

1,103 நகரங்களில் ஆய்வு இந்தியாவில் விற்கப்படும் பால் தரமாக இல்லை: எப்எஸ்எஸ்ஏஐ தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பால் தரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இல்லை என எப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் விற்பனை செய்யப்படும் பால் தரமானதாக உள்ளதா என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு முடிவை இதன் தலைமை செயல் அதிகாரி பஸ்வான் அகர்வால் நேற்று வெளியிட்டார். அவர் கூறுகையில், ‘‘பதப்படுத்தப்பட்ட பால் பொருட்களில் அப்லாடாக்சின் எம்1, ஆன்டிபயாடிக் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலப்படத்தால் பால் தரமானதாக இல்லை. அடுத்த ஆண்முதல் தர விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.   இந்த ஆய்வுக்கான நாடு முழுவதும் கடந்த ஆண்டு மாதம் முதல் அக்டோபர் வரை 1,103 நகரங்களில் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா பால் நிறுவனங்களில் இருந்து 6,432 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன என எப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்துள்ளது.

Tags : cities ,FSSAI ,India , Survey, India, Milk, FPSSAI
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை...