×

கடலுக்குள் மிதந்து வந்த பிரமாண்டமான ஸ்குவிட் முட்டை


நார்வேயில் ஆழ்கடல் பகுதியில் ஜெயன்ட் ஸ்குவிட் எனப்படும் கணவாய் மீனின் பிரமாண்டமான முட்டையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆர்ஸ்டப்ஜோர்டன் என்ற பகுதியில் 5 கடலாய்வாளர்கள் கடலடி ஆய்வினை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது கடலுக்குள் ஏற்பட்ட நீரோட்டத்தில் கண்ணாடி போன்ற ஒரு பொருள் ஆடி அசைந்து வந்தது.

சுமார் 13 அடி விட்டம் கொண்ட அந்தப் பொருள் முட்டை என்பது தெரியவந்ததால் ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அந்த பிரமாண்ட முட்டையை ஆராய்ந்ததில் அது ஜெயன்ட் ஸ்குவிட் எனப்படும் கணவாய் மீனின் முட்டை என்பது தெரியவந்தது. தற்போது இந்த முட்டையை இட்ட பிரமாண்ட ஸ்குவிட்டை தேடும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : sea ,ocean , Norway, sea, giant, squid egg
× RELATED இந்தியப் பெருங்கடலுக்கு கீழே...