×

அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு

அந்தமான் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. உலகின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே இன்று அதிகாலை 4.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 54 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதனருகே சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

The post அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Rutland Island ,Andaman Sea ,Andaman ,Dinakaran ,
× RELATED அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம்