×

200 மீட்டர் ஓட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை டினா ஆஷர் தங்கம் வென்றார்

தோகா: கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 27ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் 6ம் தேதி வரை இப்போட்டிகள் நடக்கின்றன. நேற்று அதிகாலை 2 மணிக்கு பின் நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை டினா ஆஷர் சுமித் தங்கம் வென்று அசத்தினார். அவர், பந்தய இலக்கை 21.88 வினாடிகளில் எட்டினார். டினா ஆஷர் சுமித், ஏற்கனவே 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றிருந்தார்.

டினா ஆஷர் சுமித்திற்கு அடுத்து அமெரிக்க வீராங்கனை பிரிட்டேனி பிரவுன் 22.22 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கத்தையும், சுவிட்சர்லாந்து வீராங்கனை முஜின்கா 22.51 வினாடியில் கடந்து வெண்கல பதக்கத்தையும் வென்றனர். ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிராண்ட் ஹோலோவே தங்கம் வென்றார். 13.10 வினாடியில் பந்தய இலக்கை எட்டி சாதனை படைத்தார். இந்த பிரிவில், செர்ஜி கபேன்கோவ் வெள்ளியும், மார்ட்டினாட் வெண்கலமும் வென்றனர். சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் போலந்து வீரர் பாவல், 80.50 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.


Tags : Tina Asher , Tina Asher won , gold , 200 meters
× RELATED டி.20 உலக கோப்பை தொடர்: 39 ரன் வித்தியாசத்தில் ஓமனை வென்ற ஆஸ்திரேலியா