×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் போபண்ணா ஜோடி: ரைபாகினாவை வீழ்த்தினார் ஜாஸ்மின்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் (ஆஸி.) இணை தகுதி பெற்றுள்ளது. காலிறுதியில் பெல்ஜியத்தின் சாண்டர் கில் – ஜோரன் விலிகன் ஜோடியுடன் (10வது ரேங்க்) நேற்று மோதிய போபண்ணா இணை (2வது ரேங்க்) 7-6 (7-3), 5-7, 6-1 என்ற செட் கணக்கில் 2 மணி, 4 நிமிடம் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் கஜகஸ்தான் நட்சத்திரம் எலனா ரைபாகினா (24 வயது, 4வது ரேங்க்), இத்தாலியின் ஜாஸ்மின் பவோலினி (28 வயது, 15வது ரேங்க்) சவாலை நேற்று எதிர்கொண்டார். அதிரடியாக விளையாடி ரைபாகினாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த ஜாஸ்மின் 6-2 என முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் ரைபாகினா 6-4 என வென்று பதிலடி கொடுத்தார். கடும் போராட்டமாக அமைந்த 3வது செட்டில் சிறப்பாக விளையாடிய ஜாஸ்மின் 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 3 நிமிடத்துக்கு நீடித்தது.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் போபண்ணா ஜோடி: ரைபாகினாவை வீழ்த்தினார் ஜாஸ்மின் appeared first on Dinakaran.

Tags : Bopanna ,Jasmin ,Rybakina ,French Open ,Paris ,India ,Rogan Bopanna ,Matthew Epton ,Aus ,French Open Grand Slam ,Belgium ,Sander Gill ,Joran Willigan ,Dinakaran ,
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனல்: ஸ்வியாடெக் – ஜாஸ்மின் இன்று பலப்பரீட்சை