×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இகா

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) தகுதி பெற்றார். காலிறுதியில் செக் குடியரசின் மார்கெடா வோண்ட்ரூசோவாவுடன் (24 வயது, 6வது ரேங்க்) நேற்று மோதிய இகா அதிரடியாக விளையாடி 6-0, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 2 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காஃப் (20 வயது, 3வது ரேங்க்) 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் துனிசியாவின் ஆன்ஸ் ஜெபரை (29 வயது, 9வது ரேங்க்) வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 57 நிமிடத்துக்கு நீடித்தது.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இகா appeared first on Dinakaran.

Tags : Iga ,French Open ,PARIS ,Ika Swiadek ,Poland ,French Open Grand Slam ,Czech Republic ,Markeda Vondrusova ,Dinakaran ,
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இகா மீண்டும் சாம்பியன் ஹாட்ரிக் சாதனை