×

அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா; இந்த பிட்ச்சில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என தெரியவில்லை: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

நியூயார்க்: டி.20 உலக கோப்பை தொடரில் ஏ பிரிவில் நேற்று நடந்த போட்டியில் அயர்லாந்து அணியை இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த அயர்லாந்து 16 ஓவரில் 96 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் களம் இறங்கிய இந்தியா 12.2 ஓவரில் 2 விக்கெட் இழந்து 97 ரன் எடுத்து வென்றது. ரோகித்சர்மா 52 ரன் அடித்தார். 3 ஓவரில் 6 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்த பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்குபின் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: “எனது கையில் லேசான அசவுகரியம் ஏற்பட்டது. டாசின்போது இந்த பிட்ச்சில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது தெரியவில்லை என்று சொன்னேன். ஆடுகளம் தயாரித்து 5 மாதம் தான் ஆகிறது. இந்த பிட்ச்சில் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை.

2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பின்பும் அது செட்டிலானதாக தெரியவில்லை. இருப்பினும் அதில் பவுலர்களுக்கு நிறைய உதவி கிடைத்தது. அர்ஷ்தீப் தவிர்த்து எங்களது அனைத்து வீரர்களும் நிறைய டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர். ஆரம்பத்திலேயே அவர் எடுத்த 2 விக்கெட் தான் எங்களுக்கு இப்போட்டியில் வெற்றிக்கான வழியை கொடுத்தது. ஆனால் உண்மையில் பிட்ச்சில் என்ன எதிர்பார்க்கவேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இதேபோன்ற சூழ்நிலை இருந்தால் அதற்கு தகுந்தார் போல் நாங்கள் தயாராவோம். அது 11 வீரர்களும் சேர்ந்து வெற்றிக்கு பங்காற்றக்கூடிய போட்டியாக இருக்கலாம். இது கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் எந்த மாதிரியான ஷாட்டுகளை அடிக்க வேண்டும் என்ற புரிதலை கொடுக்கிறது” என்றார்.

7 சாதனை படைத்த ரோகித்சர்மா
நேற்றைய போட்டியில் ரோகித்சர்மா 7 சாதனைகள் படைத்தார். அதன் விபரம்:
* டி20யில் இந்தியாவுக்கு அதிக வெற்றியை (43) தேடித்தந்த கேப்டன் சாதனையை டோனியுடன் ரோகித்சர்மா சமன் செய்தார்.
* சர்வதேச கிரிக்கெட்டில் 4000 ரன் மைல்கல்லை கடந்தார்.
* குறைந்த பந்தில் (2860) இந்த இலக்கை எடுத்தவரும் அவர் தான்.
* டி.20, டெஸ்ட், ஒரு நாள் போட்டி என 3 வித போட்டியிலும் கோஹ்லிக்கு பிறகு 4 ஆயிரம் ரன்னை தாண்டினார்.
* 4026 ரன் எடுத்துள்ள ரோகித், சர்வதேச டி.20 போட்டியில் அதிக ரன் எடுத்தவர்களில் பாபர் அசாமை (4023) முந்தி 2வதுஇடம் பிடித்தார். கோஹ்லி (4038) முதலிடத்தில் உள்ளார்.
* டி.20 உலக கோப்பையில் ஆயிரம் ரன் (1015) மைல்கல்லை எட்டினார். கோஹ்லி (1142) முதலிடத்தில் உள்ளார்.
* நேற்று 3 சிக்சர் அடித்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 600 சிக்சர் அடித்த முதல் வீரர், ஐசிசி தொடர்களில் 100 சிக்சர் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார்.

The post அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா; இந்த பிட்ச்சில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என தெரியவில்லை: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Ireland ,Rohit Sharma ,New York ,T20 World Cup A Group match ,Dinakaran ,
× RELATED நியூயார்க்கின் புதிய ஆடுகளத்தில்...