×

மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிட வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: உத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்சார ஒழுங்கு ஆணையம் 2018-19ம் ஆண்டில் உத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிட வேண்டுமெனவும், உத்தேச கட்டண உயர்வை தவிர்க்க வாய்ப்புள்ள மாற்று ஆலோசனைகளையும்  முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில், கட்சியின் முன்னாள் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் மற்றும் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தமிழ்நாடு  மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : hike ,Marxist , Electrical ,connection, Abandon, Marxist insistence
× RELATED கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி...