×

கண்காட்சியில் அசத்தல் முயற்சி : பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து நூல் தயாரிப்பு

திருப்பூர் : பெங்களூருவை சேர்ந்த எஸ்.எஸ்.டி., டெக்ஸ்டைல் மீடியா நிறுவனம், ஆண்டுதோறும் சர்வதேச ஜவுளி நூல் கண்காட்சியை, திருப்பூரில் நடத்தி வருகிறது. இந்தாண்டு கண்காட்சி திருமுருகன்பூண்டியில் நேற்று  தொடங்கியது. இதில், பருத்தி, கம்பளி, பட்டு உள்ளிட்ட இயற்கை இழை, பருத்தி, கம்பளி, பட்டு, லினென் கலப்பு, செயற்கை நுாலிழைகள், துணி ரகங்கள். எம்ப்ராய்டரி, டெனிம், பாட்டம் வெயிட், பிரின்டட், பிராசஸ்டு, வெல்வெட், விசைத்தறிகளில் தயாரிக்கப்பட்ட சர்ட், டிரிம்ஸ். பட்டன், ஹேங்கர்கள், ஜிப், லேபிள், லேஸ், டேப் ரகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதில் ஒரு அரங்கில், வேஸ்ட் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து நூல் தயாரித்து வைக்கப்பட்டிருந்தது தொழில்துறையினரை வெகுவாக கவர்ந்தது. இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறுகையில்: பிளாஸ்டிக் வேஸ்ட் என்பது நம்மை பயமுறுத்தும் ஒரு விஷயம்.இது மக்கவும் மக்காது. அந்த வகையில் பொதுமக்கள் உபயோகித்தப்பின் தூக்கி எறியும் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி முறையில், நூல் தயாரித்து, அதில் பனியன் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

 இதற்காக வடமாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று பயனற்ற பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி, அதை மறுசுழற்சி மூலம் செயற்கை நூல் தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஆதரவு கிடைக்குமானால், வீணாக தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயனுள்ள வகையில் மாற்றிக்கொள்ள கொள்ளமுடியும். அதே நேரத்தில் இயற்கை மாசடைவதையும் தடுக்க முடியும் என்றார்.

Tags : exhibition , Tirupur ,Exhibition ,Thread ,Plastic Bottle
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...