×

மருத்துவமனையில் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம்: 4 காவலர்கள் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முதல் நிலை காவலர் நரேந்திரன், பெண் காவலர்கள் சரிதா, அம்பிகா, நீலாவதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பணியில் கவனக்குறைவாக இருந்ததை அடுத்து 4 காவலர்களை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டார்.

Tags : Chennai ,Adi ,Kilpauk Government Hospital ,Narendran ,Saritha ,Ambika ,Neelavathi ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரூரில் கயிறு, பானை விற்பனைக்கு குவிப்பு