×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜனவரி.17ல் நேரில் செல்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சங்கமம் கலை விழாவை நாளை தொடங்கி வைக்கிறேன். எல்லோருக்குமான திருநாள் பொங்கல்; எல்லோருக்குமான அரசு திராவிட மாடல் அரசு. சாதி, பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடு எங்கும் பொங்கட்டும். பொங்கல் விழா, விளையாட்டுப் போட்டி, கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்தி திமுகவினர் பரிசு வழங்க வேண்டும். 2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாக இருக்கட்டும். உடன்பிறப்புகளின் உழைப்பால் திமுகவுக்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும் என குறிப்பிட்டார்.

Tags : Alanganallur Jallikattu competition ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Alanganallur Jallikattu ,Chennai Sangamam Art Festival ,Dravidian ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரூரில் கயிறு, பானை விற்பனைக்கு குவிப்பு