×

வடக்கு கரோலினாவை தாக்கியது ‘டோரியன்’: இதுவரை 30 பேர் பலி

சார்ல்ஸ்டன்: பஹாமஸ் தீவை தாக்கிய டோரியன் புயல், வீரியம் குறைந்து அமெரிக்காவின் கரோலினா பகுதியை கடந்து செல்கிறது. அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான ‘டோரியன்’ புயல், 5ம் எண் தீவிர புயலாக உருவாகி பஹாமஸ் தீவை கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கியது. அப்போது, மணிக்கு 295 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால், இந்த தீவில் பலத்த சேதம் ஏற்பட்டது. இங்கு புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த புயல் தற்போது 2ம் எண் புயலாக தீவிரம் குறைந்துள்ளது. இது அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா பகுதியை நேற்று முன்தினம் கடந்து சென்றது.

இதனால், நேற்று முன்தினம் இரவு முழுவதும் வடக்கு கரோலினா பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இந்த புயல் காரணமாக தெற்கு கரோலினா, ஜார்ஜியா, தென்கிழக்கு விர்ஜினியா ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கரோலினா கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு ஏற்கனவே சென்று விட்டதால், சேத பாதிப்பு குறைவாக இருந்தது.

Tags : Dorian ,North Carolina , Dorian, North Carolina, 30 killed
× RELATED இந்தியாவின் எதிர்ப்புக்கு பதில்...