×

அந்தந்த மாநிலத்தவருக்கு முன்னுரிமை முக்கியம்: என்.கண்ணையா, எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர்

ரயில்வே துறையில் இனிமேல் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது கஷ்டம் தான். தற்போது கூட ரயில்வே துறையில் வேலை செய்பவர்களை வெளியில் அனுப்ப வேண்டும் என்று நினைக்கின்றனர். ரயில்வே துறையை தனியார்மயமாக்கமாட்டோம் என்று ரயில்வே அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறுகிறார். ஆனால் கார்ப்பரேஷனாக மாற்றப்படும் என்கிறார். கார்ப்பரேஷன் மயமாக மாற்றுவதும் தனியார்மயமாக்குவதும் வேறல்ல.. இரண்டும் ஒன்று தான்.
தற்போது ரயில்வே துறையில் 17 லட்சத்து 80 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கே வேலை நிரந்தரமாக இருக்குமா என்று தெரியவில்லை காரணம், தற்போது 55 வயது அல்லது 30 வருடம் சர்வீஸ் இருக்கவேண்டும் என்றுகூறி சான்றிதழ்களை பார்த்து சரியில்லை என்றால் வேலையை விட்டு எடுக்க வேண்டும் என்று மறைமுகமாக முடிவு எடுத்துள்ளனர். இது மறைமுகமாக தனியார்மயமாக்கும் முயற்சி ஆகும். தற்போது ஒப்பந்த ஊழியர் அடிப்படையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 10 சதவீதம் தான் நிரந்தர ஊழியர்கள். மீதி 90 சதவீதம் பேர் ஒப்பந்த அடிப்படையில் தான் உள்ளனர். அப்படி உள்ளவர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் ெகாடுத்து ஏதாவது காரணம் கூறி வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். மேலும் ரயில்வே நிர்வாகம் சார்பில் 2 ஆயிரம் உலகத் தரம்வாய்ந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. அதன் விலை ₹2 கோடி அதை இந்திய ரயில்வே வாங்குகிறது. மேக் இன் இந்தியா என்று கூறுகின்றனர். பல உலகநாடுகள் வாங்கும் பெட்டிகளை தனியார் மயமாக்கும் போது வருமான வரி, ஜிஎஸ்டி போன்ற வரிகள் வரும் போது அதன்விலை ₹3 கோடி 45 லட்சமாகும். அதைப்போன்று ஐசிஎப்பில் உள்ள நிறுவனத்தையும் கார்ப்பரேஷன் நிறுவனமாக்குவதாக கூறுகின்றனர்.

எங்கெல்லாம் லாபத்தில் செல்கிறதோ அதையெல்லாம் கார்ப்பரேஷன் நிறுவனமாக மாற்றி தனியார் மயமாக்க நினைக்கின்றனர். ரயில்வே துறையில் ஐஆர்டிசி என்ற ஒரு ஏஜென்சி நிறுவனம் உள்ளது. அவர்களுக்கு டெல்லியில் உள்ள தேஜா ரயிலை ₹65 கோடிக்கு கொடுக்க உள்ளனர். அவர்கள் வெளி ஆட்களுக்கு கொடுக்கும்போது அவர்களே விலையை முடிவு செய்வார்கள். அதன் பிறகு ரயில்வே நிர்வாகம் தலையிட முடியாது. அதன்பிறகு சதர்ன் ரயில்வேயை கொடுக்க முடிவு செய்துள்ளனர். ர்ப்பரேஷன் நிறுவனமாக மாற்றப்படும்போது ரயில்வே நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாமல் போய்விடும். இளைஞர்களுக்கு வேலையில்லாமல் போய்விடும். ரயில்வேயில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அதாவது கேரளா, தமிழகத்தில் இந்தியில் பேச வேண்டும் என்று அறிவிப்பு செய்தனர். அதன்பிறகு கடிதம் ெகாடுத்து அந்த ஆர்டர் ரத்து செய்யப்பட்டது. இந்தி திணிப்பு என்பதை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ரயில்வேயில் உள்ள தொழில்நுட்ப துறைகளில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  பதிவு செய்தவர்களுக்கு தான் வேலை வாய்ப்புகள் தர வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் மற்ற மாநிலத்தில் வேலை செய்ய விருப்பம் இல்லாமல்தான் இருக்கின்றனர். அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் அவர்களுடைய மாநிலத்தில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். அதற்கு பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்படி மற்ற மாநிலத்தில் காலிப்பணியிடம் இல்லையென்றால் அங்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஆர்ஆர்பிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இதன் மூலம் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும். ஆனால் அனைவருக்கும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. மேலும் ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதால் ஒப்பந்த ஊழியர்களை வைத்துக் கொள்வார்களா அல்லது நிரந்தர பணியாளர்களைத் தான் வைப்பார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. மற்ற மாநிலத்தில் காலிப்பணியிடம் இல்லையென்றால் அங்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

Tags : Priority ,important, respective states, N. Kannaiah, SRMU, General Secretary
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...