×

உ.பி. இடைத்தேர்தலில் ஆர்எல்டி தனித்து போட்டி


லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ராஷ்டிரிய லோக் தளம் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் மசூத் அகமத் அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பல எம்எல்ஏ.க்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனால் 11 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாகி உள்ளன. இந்த தொகுதிகளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால் அதுகுறித்த நடவடிக்கைகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மக்களவை தேர்தலில், கூட்டணி அமைது போட்டியிட்ட சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் பிரிந்துவிட்டன. இந்த இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதனிடையே உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில், இந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த மற்றொரு கட்சியான ராஷ்டிரிய லோக் தளமும் தனித்து களமிறங்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இதனால் 5 முனை போட்டி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

புது கூட்டணி
சட்டப்பேரவை இடைத்தேர்தலில், பாஜ கூட்டணியில் இருந்து விலகியுள்ள சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி சமாஜ்வாடி அல்லது பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடபோவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் அரவிந்த் ராஜ்பார் செய்தியாளர்களிடம் கூறுகையில், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் மூத்த தலைவர்களுடன் பேச்சுநடத்தி வருகிறோம். எங்கள் கட்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலை இந்த இருகட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றார்.

Tags : UP RLD ,election , UP, SPECIAL, RLD, SPECIAL, COMPETITION
× RELATED மக்களவைத் தேர்தலை ஒட்டி ரூ.9,000 கோடி...