×

மக்களவைத் தேர்தலை ஒட்டி ரூ.9,000 கோடி மதிப்புள்ள பணம், தங்க நகைகள், போதைப் பொருள் உள்ளிட்டவை பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: மக்களவைத் தேர்தலை ஒட்டி ரூ.9,000 கோடி பணம், தங்க நகைகள், போதைப் பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர். மக்களவைத் தேர்தலை ஒட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின் நாடு முழுவதும் ரூ.9,000 கோடி பணம், தங்க நகைகள், போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மார்ச் 1-ல் இருந்து மே 18 வரை நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் சிக்கிய பொருளில் 45 சதவீதம் போதைப் பொருள்கள் ஆகும்.

உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றதாக ரூ.849.15 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பணம் பறிமுதலை பொறுத்தவரை ரூ.114.41 கோடியுடன் தெலுங்கானா முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா மாநிலம் ரூ.92.55 கோடியுடன் 2-வது இடத்திலும் உள்ளது. டெல்லியில் ரூ.90.79 கோடியும், ஆந்திரத்தில் ரூ.85.32 கோடியும், மராட்டியத்தில் ரூ.75.49 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மார்ச் 1-ல் இருந்து மே 18 வரை நடந்த சோதனைகளில் குஜராத்தில் அதிகபட்சமாக ரூ.1187.85 கோடி மதிப்பு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பஞ்சாபில் ரூ.665.67 கோடி மதிப்பு போதைப் பொருள்களும் டெல்லியில் ரூ.358.42 கோடி மதிப்பு போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் ரூ.330.9 கோடி மதிப்பு போதைப் பொட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தில் நடந்த சோதனைகளில் ரூ.265.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 தேர்தலின் போது ரூ.1279.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் ரூ.3958.85 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் சிக்கியுள்ளது.

நாடு முழுவதும் விதிமீறி பதுக்கிவைக்கப்பட்டிருந்ததாக ரூ.814.85 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்தனர். கர்நாடகத்தில் ரூ.175.36 கோடி மேற்கு வங்கத்தில் ரூ.90.42 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்துள்ளனர். தெலுங்கானாவில் ரூ.76.26 கோடி, உ.பி.யில் ரூ.52.62 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1260.33 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லியில் ரூ.195 மதிப்பு தங்க நகைகளும், மராட்டியத்தில் ரூ.188 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் ரூ.145 கோடியும், குஜராத் மாநிலத்தில் ரூ.128.56 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.99.85 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. வாக்காளர்களுக்கு இலவமாக வழங்க கொண்டு செல்லப்பட்டதாக ரூ.2006.56 கோடி மதிப்பு பரிசுப்பொருள்களை பறிமுதல் செய்தனர். ராஜஸ்தானில் ரூ.756.77 கோடி, மத்தியப்பிரதேசத்தில் ரூ.177.45 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் ரூ.162 கோடி மதிப்பு பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ரூ.145.5 கோடியும், ஒடிசாவில் ரூ.113 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post மக்களவைத் தேர்தலை ஒட்டி ரூ.9,000 கோடி மதிப்புள்ள பணம், தங்க நகைகள், போதைப் பொருள் உள்ளிட்டவை பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Election Commission ,Delhi ,People's Election ,Dinakaran ,
× RELATED 2024 மக்களவை தேர்தலில் பதிவானதைவிட...