×

ரத்ததானத்தில் சாதனை மாற்றுத்திறனாளிக்கு ரஜினி பாராட்டு

சென்னை: ரத்ததானம் வழங்குவதில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். பிரகாஷ்  நாடார் என்பவர் கால் ஊனமுற்றவர். அவர் கூறும்போது, ‘உலகிலேயே 100 ரத்ததான முகாம்களில் கலந்துகொண்டு ரத்ததானம் செய்த முதல் மாற்றுத்திறனாளி நான். 18 மாநிலங்களில் ரத்ததானம் செய்துள்ளேன். மேலும் 1 லட்சத்து 5 ஆயிரம் கி.மீ  தூரம் சென்று உடல்தானம், ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு செய்திருக்கிறேன். இரு தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தேன். அவர் மூலமாக இந்த அங்கீகாரத்துக்கான சான்றிதழை பெற்றேன்’ என்றார். பிரகாஷ் நாடார் ரஜினியை சந்தித்தபோது, அவருக்கு பாராட்டு தெரிவித்து ரஜினி கவுரவித்துள்ளார்.

Tags : Rajini ,successor , Rajatini, praise, achievement, redeemer
× RELATED இந்தியன் 2 இசை வெளியீடு: ஒரே மேடையில் ரஜினி, கமல்