×

கோடை மழையால் பூக்கள் கொட்டியது வரத்து குறைவால் தக்காளி விலை உயர்கிறது

கோவை :    கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்துார், நாச்சிபாளையம், அன்னூர், கிணத்துக்கடவு, சூலுார் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி பயிரிடப்பட்டு வருகிறது. இந்தாண்டு மழை இல்லாததாலும், வெப்பக்காற்று வீசிவருவதாலும் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஆர்வம் காட்டவில்லை.கோவைக்கு ராயக்கோட்டை, ஓசூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தும் தக்காளி கொண்டுவரப்படுகிறது. வடமாநிலங்களிலும் தற்போது தக்காளிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவைக்கு அதிக அளவில் தக்காளி வரவில்லை.

 நாள் ஒன்றுக்கு, 50 முதல், 100 லாரிகளில் வரும் தக்காளி, கடந்த சில நாட்களாக 15 முதல் 20 லாரிகளில் மட்டுமே வருகின்றன. கடந்த நாட்களுக்கு முன் பெய்த மழையால், தக்காளி செடியில் இருந்த பூக்கள் உதிர்ந்து விட்டன. இதனால் கோவையில் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ரூ.15க்கு விற்பனையாகி வந்த நாட்டுதக்காளி தற்போது 30 முதல் 35 ரூபாய் வரை விற்பனையாகிறது. மீண்டும் கோடை மழை தொடர்ந்தால், பூக்கள் கொட்டி தக்காளி மகசூல் வெகுவாக குறையும் என்றும்,இதனால் மேலும் விலை அதிகரிக்கலாம் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Coimbatore, Tomato price,summer price
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு பணம் தராத பா.ஜ.க....