×

என்ன பாத்தா குரைக்கிற மவனே... நான் யார் தெரியுமா? நாயை கொடூரமாக வெட்டிக்கொன்ற வாலிபர்: கடையம் அருகே விபரீதம்

கடையம்: கடையம் அருகே குரைத்த நாயை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். வீடுகளில் நாய்களை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்கள். தங்கள் பிள்ளையைப்போல் அவைகளுக்கு விருப்பமான பெயரிட்டு அழைப்பார்கள். அத்தனை பிரியமான நாய் சாகடிக்கப்பட்டால் அவர்கள் மனம் என்ன பாடுபடும். இங்கே ஒரு வாலிபர் தன்னை பார்த்து குரைத்ததால் அந்த நாயின் கதையையே முடித்து விட்டார். இந்த சம்பவம் நெல்லை மாவட்டம் கடையம் பகுதியில் நடந்துள்ளது. இங்குள்ள கோதண்டராமபுரத்தை சேர்ந்த பால் நாடார் மகன் ராமச்சந்திரன்(33). இவர் எலுமிச்சை மண்டி வைத்துள்ளார். இவரது வீட்டில் செல்லமாக நாய் வளர்த்து வந்தார். அதை வீட்டு முன் கட்டி போடுவது வழக்கம். யாராவது வெளி ஆட்கள் வந்தால் அவர்களை உள்ளே விடாது குரைத்து விரட்டிவிடும். நேற்றிரவு அதே ஊர் கீழ தெருவைச்சேர்ந்த பரமசிவன் மகன் ராஜ் என்ற ராமச்சந்திரன்(23) என்பவர் இவர்கள் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் போதையில் இருந்துள்ளார். அங்கு சென்ற ராஜ், வீட்டு கதவை தட்டியதும் அவரது மனைவி இசக்கியம்மாள் வந்து திறந்துள்ளார். சித்தப்பா இல்லையா என்று ராஜ் கேட்கவே, அவர் வெளியே போய் உள்ளார்.

இந்த நேரத்தில உனக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டுள்ளார். அந்த நேரம் பார்த்து அவர்கள் வீட்டு நாய் ராஜை பார்த்து குரைத்துள்ளது. இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. என்னையே குரைக்கிறாயா உன் கதை இன்றோடு குளோஸ் என்று உளறவே, குடித்துவிட்டு புலம்புகிறான் என்று இசக்கியம்மாள் ராஜை வெளியே போகச் சொல்லிவிட்டு.. வீட்டு கதைவையும் காம்பவுண்ட் கதவையும் பூட்டினார். தள்ளாடியபடி வீட்டிற்கு சென்ற ராஜ் அரிவாளை எடுத்து வந்தார். காம்பவுண்ட் கதவு பூட்டியிருந்ததால் சுவர் ஏறி குத்து உள்ளே சென்ற அவர், அந்த நாயை வெட்டிச்சாய்த்தார். அந்த வாயில்லா ஜீவன் பரிதாபமாக இறந்தது. அதோடு நிற்காமல் வீட்டு கதவு மற்றும் ஜன்னல்களையும் வெட்டி குதறி போட்டுவிட்டு  அங்கிருந்து ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து கடையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்ஐ ஈசுவரபிள்ளை விசாரணை நடத்தி ராஜை கைது செய்தார். அவரை இன்று அம்பை கோர்ட்டில் ஆஜர் படுத்தி காவலில் வைத்தனர்.

நாய்க்கு உணவளித்த பெண்ணுக்கு ரூ.3.60 லட்சம் அபராதம்
மும்பை ஹவுசிங் சொசைட்டி பகுதியில் தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த இளம்பெண் நேகா தத்வானி. இவருக்கு நாய் என்றால் கொள்ளை பிரியம். தன் வீட்டில் வளர்த்ததோடு ெதரு நாய்கள் மீதும் அன்பு செலுத்துவார். இதனால் அந்த நாய்களுக்கு தினசரி உணவளிப்பது வழக்கம். இது அங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கு பிடிக்கவில்லை. தெரு நாய்கள் தொல்லையால் அவர்கள் சொசையிட்டியில் புகார் செய்தனர். அவர்களும் நேகாவை அடிக்கடி எச்சரித்துள்ளனர்.

சிறிய அளவில் அபராதமும் விதித்துள்ளனர். அதை சட்டை செய்யாத அவர் தொடர்ந்து உணவளித்ததால் இப்போது அவருக்கு ஹவுசிங் சொசைட்டி ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இதை கட்ட மறுத்த நேகா, நாய்க்கு உணவளித்தது ஒரு குற்றமா என குமுறிப்போய் உள்ளதோடு, இனி இந்த காலனியில் இருக்க மாட்டேன் விரைவில் வெளியேறிவிடுவேன் என்று எச்சரிக்கை மிரட்டல் விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mavana ,Baptist ,disaster ,stump , dog, disaster, kadayam
× RELATED பழநியில் பேரிடர் மீட்பு படையினர் ஆலோசனை கூடடம்