×

சென்னை-சந்திரகாசிக்கு சிறப்பு ரயில்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, சந்திராகாசிக்கு ஏப்ரல் 13 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த  ரயில்(82802) மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.30 மணிக்கு சென்றடையும்.

இதேபோல், சென்னை, சென்ட்ரல் முதல் சந்திராகாசி ஏப்ரல் 20, 27, மே 4, 11, 18, 25 மற்றும்  ஜூன் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில்  சுவிதா சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மாலை 6.20 மணிக்கு  புறப்பட்டு மறுநாள் இரவு 11.30-க்கு சென்றடையும். மேலும், கூடூர், நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்திரி, துவாடா, சிம்ஹாசலம், பிரமாபூர், புவனேஷ்வர், ஜெய்பூர் வழியே சந்திராகாசிக்கு சென்றடையும். இவ்வாறு தெற்கு ரயில்வே  வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai , Special train , Chennai-Chandrakasi
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...