×

போலீஸ் பாதுகாப்பு கோரி வி.சி.க தலைவர் திருமாவளவன் தொடர்ந்த வழக்கு..: சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைப்பு!

சென்னை: போலீஸ் பாதுகாப்பு கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. 2016ம் ஆண்டு தேர்தல் நேரத்திலிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனிப்பட்ட காவலரை நியமிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமாவளவன் பயணிக்கும் இடங்களில், ஒரு டி.எஸ்.பி. மற்றும் 10 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவதாகவும், பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது ஒரு டி.எஸ்.பி மற்றும் நான்கு இன்ஸ்பெக்டர், காவலர்கள் பாதுகாப்பில் இருப்பதாகவும், இதே போன்று அவர் தங்கும் ஊர்களில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்க மறுத்த மனுதாரர், பொதுவான பாதுகாப்பை தவிர 24 மணி நேரமும் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, திருமாவளவனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு 3ம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது திருமாவளவனுக்கு வழங்கும் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு அவகாசம் கோரியது. இதையடுத்து இந்த வழக்கை ஏப்ரல் 5ம்(இன்று) தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமாவளவனுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதாக காவல்துறை உறுதி அளித்ததை தொடர்ந்து இந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirumavalavan ,VCC ,police protection proceedings ,Chennai High Court , Police Security, VC, Thirumavalavan, Case, Chennai High Court
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...