×

மஜதவுக்கு ஆதரவாக பிரசாரம் ஆடியோ விவகாரத்தில் சிக்கிய தாசில்தார்: தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்

மைசூரு: மஜதவுக்கு ஆதரவாக ஆடியோ மூலம் பிரசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மைசூரு தாசில்தாரை தேர்தல் பணியில் இருந்து உடனடியாக விடுவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா முதல் நிலை தாசில்தாராக பணியாற்றி வந்தவர் ரேணுகுமார். இவர் மஜதவுக்கு  ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற அவர் மஜதவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து ஆடியோ டேப்பில்  பதிவு செய்து வெளியிட்டதாக புகார் கூறப்பட்டது. மேலும் அந்த ஆடியோவில் உயர் கல்வித்துறை அமைச்சர் ஜிடி தேவகவுடா, பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்று இருந்தது. இதையொட்டி கங்கராஜு என்ற வக்கீல், மாவட்ட கலெக்டர் அபிராம் ஜி சங்கரை சந்தித்து தாசில்தார் ரேணுகுமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார்.

புகாரை ஏற்ற கலெக்டர், இதுபற்றி தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை கேட்டார். அத்துடன் வருவாய்த்துறையின் முதன்மை செயலாளருக்கும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அறிக்கையை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், புகாரில் குறிப்பிடப்பட்ட தாசில்தாரை தேர்தல் பணியில் இருந்து விடுவிப்பதுடன் இடமாற்றம் செய்யும்படியும் பரிந்துரைத்தது. அதன்படி ரேணுகுமாரை தேர்தல் பணியில் இருந்து விடுவித்த மாவட்ட கலெக்டர் இடமாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில் ரேணுகுமாருக்கு எந்த பொறுப்பும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சரகூரு தாலுகா தாசில்தாராக ரேணுகுமாருக்கு பதில் மகேஷை நியமிக்கப்பட்டுள்ளார்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : audio campaign , Tasilthar, audio campaign, election
× RELATED ஷிகெல்லா நோய் பாதித்து 8 வயது சிறுமி பலி: கேரளாவில் பரிதாபம்