×

ராஜஸ்தானில் நல்-பிகானீர் விமானப்படைத் தளத்திற்கு அருகே செயல்பாட்டில் இருந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு

பிகானீர்: ராஜஸ்தானில் நல்-பிகானீர் விமானப்படை தளம் அருகே செயல்பாட்டில் உள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் நகரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் இந்திய விமானப்படையின் நல் விமானத்தளம் அமைந்துள்ளது. இன்று, இந்த விமானப்படை தளம் அருகே செயல்பாட்டில் உள்ள வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய விமானப்படை (IAF) அதிகாரிகள் மற்றும் போலீசார் இந்த விவகாரத்தை விசாரிக்க சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். விமானப்படை தளத்திற்கு அருகே இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை தூண்டிவிடும் வகையில் இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் பஞ்சாப் மாநிலத்தின் கேம்காரன் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் மிகப்பெரிய ஆளில்லா போர் விமானம் ஒன்றும், நான்கு எஃப்-16 வகை போர் விமானங்களின் ஊடுருவல் ரேடார் கருவிகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய விமானப்படையின் மிரேஜ் மற்றும் சு-30எம்கேஐ வகை போர் விமானங்கள் உடனடியாக அங்கு சென்று பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டியடித்தன. இந்த சம்பவத்தால் பஞ்சாப் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டது. இதையடுத்து இன்று நல்பிகானீர் விமான தளத்தின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பராபரை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, பூனேவில் உள்ள பிம்பல்வாடி கிராமத்தில் இன்று காலை சந்தேகத்திற்குள்ளான நபரிடம் இருந்து  துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் வெடிமருந்துகள், மற்றும் 59 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nal-Bikaner ,Rajasthan ,Air Force Base , Rajasthan, Nal-Bikaner Air Force, Bomb, Discovery
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...