×

தொகுதி வளர்ச்சிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும்: தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பேச்சு

சென்னை:  தென்சென்னை அதிமுக  வேட்பாளர் ஜெயவர்தன் நேற்று காலை பெசன்ட் நகர், பஸ் டிப்போ, விநாயகர் கோயில் அருகில்175, 176வது வட்டத்தில் வாக்கு சேகரித்தார். அவருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, முன்னாள் எம்எல்ஏ அசோக், ராஜேந்திர பாபு,  கண்ணன், வட்ட செயலாளர்கள் ஆறுமுகம், இமாம், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பாமக வடிவேல், தேமுதிக பிரபாகரன், பாஜக  டால்பின் தர்,  தமாகா கொட்டிவாக்கம் முருகன்,  சமத்துவ மக்கள் கட்சி பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி ரமேஷ்,  புரட்சிபாரதம் ஆதிவேந்தன் மற்றும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் திரளாக  சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.பின்னர், அடையாறு மற்றும் பெச்ன்ட் நகர் பகுதிகளில்  ெஜயவர்தன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:அடையாறு மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில் பிரசாரம் துவங்கிய நாள் முதல் இன்று வரை மக்கள் வரவேற்பும், எழுச்சியும் அதிகமாக  உள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து நிலுவையில் இருந்த பாதாள சாக்கடை திட்டம்,  நாங்கள் கொண்டு வந்த  திட்டம். இந்த திட்டம்  தொடங்கப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது. மீதம் 5 சதவீத பணிகள் மட்டுமே உள்ளது. விரைவில் அந்த பணி முடிந்து விடும்.

காங்கிரஸ் கூட்டணி மக்களை நம்பி இருக்க கூடிய கட்சிகள் அல்ல. வருமான வரித்துறையின் நடவடிக்கை தகவலின் அடிப்படையில் தான் நிகழந்தது. மக்கள் தெளிவாக இருப்பதால் தான் கடந்த வருடங்களில் மக்களால்  காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தென் சென்னை  தொகுதி மக்களின் கருத்துக்களை கேட்டு, அவர்களின் அடிப்படை தேைவகள் நிறைவேற்றப்படும். தொகுதி வளர்ச்சிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு,  செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayawardan ,talks ,South Chennai AIADMK , block development, implemented , implemented, South Chennai AIADMK,Jayawardan
× RELATED தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர்...