பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் தற்போது மழையில்லாததால், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதனால், வனத்தில் உள்ள பெரும்பாலான மரங்கள் காய்ந்து, இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. மேலும், வறட்சியால் நீரோடைகளில் தண்ணீர் இல்லாமல், விலங்குகள் நீர் நிலையை தேடி இடம்பெயர்ந்து வருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுலா பகுதியான டாப்சிலிப், குரங்கு அருவி உள்ளிட்ட இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடையே தீ அபாயத்தை தவிர்க்கும் வகையிலான விழிப்புணர்வை, வனத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், வறட்சியின் கோரப்பிடியில் உள்ளதால் வனத்திற்குள் சென்று இயற்கை அழகை ரசிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஆழியார் அருகே நவமலை வனத்தின் உள்ள பெரும்பாலான மரங்கள் காய்ந்து, பட்டுபோன நிலையில் உள்ளது. எந்நேரத்திலும் தீ பிடிக்கும் அபாயம் உள்ளதால், அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது, என வனத்துறையினர் தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
