×

இந்தியா- ஆஸ்திரேலியா கூட்டுப்பயிற்சி 2 அதிநவீன போர் கப்பல்கள் சென்னை துறைமுகம் வருகை

சென்னை: இந்தியா- ஆஸ்திரேலியா கூட்டு பயிற்சிக்காக 2 அதிநவீன போர் கப்பல்கள் நேற்று சென்னை துறைமுகத்திற்கு வந்தன. ஆஸ்திரேலியா- இந்தியா கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதை தொடர்ந்து, ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த அதிநவீன 2 போர் கப்பல்கள் பாரமட்டா, சக்சஸ் ஆகியவை நேற்று சென்னை துறைமுகத்துக்கு வந்தன. இந்த கப்பலில் வந்த ஆஸ்திரேலியா ராணுவ ஆலோசகர் சைமன் பேட்ஸ்மேன், கேப்டன், வீரர்கள் ஆகியோரை சென்னை கிழக்கு பிராந்திய துறைமுக கமாண்டோ வீரர் தீபக் வரவேற்றார். பின்னர் ஆஸ்திரேலிய ராணுவ ஆலோசகர் சைமன் பேட்ஸ்மேன் நிருபர்களிடம் கூறியதாவது:ஆஸ்திரேலியா- இந்தியா கடற்படையினர் ஏப்ரல் 2ம் தேதி முதல் 16ம் தேதி வரை கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளனர். எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, போரிட்டு அவற்றை அழிப்பது ஆஸ்இன்டெக்ஸ் 19ன் முக்கிய நோக்கம் ஆகும்.

அதன்படி ஆஸ்திரேலியாவில் இருந்து பாரமட்டா, சக்சஸ் ஆகிய 2 கப்பல்கள் நேற்று சென்னை துறைமுகத்துக்கு வந்தன. அதேபோல் கான்ெபரா, நியூகேஸ்டல் ஆகிய கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இந்த பயிற்சியில் 1200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் 39 வகையான போர் யுக்திகள் பற்றி பயிற்சி அளிக்கப்படும். ஏற்கனவே 2015ம் ஆண்டு இந்தியாவிலும், 2017ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலும் தற்போது 2019ம் ஆண்டு இந்தியாவிலும் பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த பயிற்சியில் 4 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்படும். மேலும் 2016ம் ஆண்டு பாதுகாப்பு சம்பந்தமான பலமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 2017ம் ஆண்டு வெளியுறவுக் கொள்கை வெள்ளை அறிக்கை என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டப்பட்டது. அதன்படி இந்தியாவுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறோம்.

மேலும் இந்தோ- பசுபிக், பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒன்றிணைந்து  இந்த கடல் பகுதிகளை பாதுகாப்பதற்காக  ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து செயல்பட உள்ளோம். அதற்காக அந்த நாட்டு துறைமுகங்களுக்கும் செல்ல உள்ளோம். முதல்கட்டமாக கூட்டு கடற்பயிற்சியில் 1200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Australia ,Chennai Port , India, Australia, Warships, Chennai Port
× RELATED ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1