×

தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்: தா.மோ.அன்பரசன் உறுதி

ஆலந்தூர்: ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன், தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று நங்கநல்லூர் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருடன், ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் மத்தியில் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘இந்த பகுதியில் நான் உங்களில் ஒருவனாக இருந்து பல்வேறு நலத் திட்ட பணிகளை நிறைவேற்றி தந்துள்ளேன். குறிப்பாக பழவந்தாங்கலில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம், தில்லை கங்கா நகர், 26, 27வது தெருக்களில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு, தொகுதி முழுவதும் 4000 எல்இடி விளக்குகளை புதிதாக அமைத்து கொடுத்துள்ளேன். நந்தம்பாக்கம், ஐ.டி.ஐ.பில் காலனியில் ஒரு பெண்கள் கலைக்கல்லூரி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வட்டாட்சியர் அலுவலகம் அருகிலேயே பத்திரப்பதிவு அலுவலக அமைக்க இடம் பெற்று தந்தது உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை நிறைவேற்றி தந்துள்ளேன். மீண்டும் என்னை நீங்கள் வெற்றி பெற செய்தால், ஆலந்தூர் தொகுதி வளர்ச்சி பணிக்கு பாடுபடுவேன்,’ என்றார். மாவட்ட பொருளாளர் எம்எஸ்கே இப்ராஹிம், துணை செயலாளர் மு.சத்யா, சுப்புராஜ் உட்பட பலர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்….

The post தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்: தா.மோ.அன்பரசன் உறுதி appeared first on Dinakaran.

Tags : Da.Mo.Anparasan ,Alandur ,Constituency ,DMK ,Mo. Anparasan ,
× RELATED ஓடும் காரில் தீவிபத்து