×

வெயில், மழையில் கட்சி பணியாற்றிய தமிழிசையை பாஜ கைவிட்டுவிட்டது: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மழையிலும், வெயிலிலும் காய்ந்து கட்சிப் பணியாற்றிய தமிழிசையை பாஜ கைவிட்டுவிட்டது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். சத்தியமூர்த்தி பவனில் நேற்று அவர் அளித்த பேட்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்காக தீவிரமாக பணியாற்றி அவர்களை வெற்றி பெற வைப்போம். நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு மீண்டும் ஒன்றிய அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார்கள். ஆனால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மழையிலும், வெயிலிலும் காய்ந்து கட்சிப் பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜனை பாஜ கைவிட்டுவிட்டது. கட்சி செயற்குழு கூட்டத்தில், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார். பேட்டியின்போது, காங்கிரஸ் துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு, மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு உள்பட பலர் இருந்தனர்.

The post வெயில், மழையில் கட்சி பணியாற்றிய தமிழிசையை பாஜ கைவிட்டுவிட்டது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamilisai ,Selvaperunthakai ,Chennai ,Tamil Nadu Congress ,president ,Selvaperunthagai ,Isai ,Satyamurthy Bhavan ,Vikravandi ,DMK ,Salvapperunthakai ,
× RELATED யாரையாவது தவறாக எழுதினால் கடும்...