×

கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோருக்கு பொறுப்பு மக்களவை-மாநிலங்களவை நிர்வாகிகள் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மக்களவை-மாநிலங்களவைக்கான திமுக நிர்வாகிகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மக்களவை- மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற குழுத் தலைவராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, மக்களவைக் குழுத் தலைவராக பொருளாளர் டி.ஆர்.பாலு, மக்களவைக் குழுத் துணைத் தலைவராக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், மக்களவை கொறடாவாக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, மாநிலங்களவைத் குழுத் தலைவராக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, மாநிலங்களவை குழுத் துணைத் தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், மாநிலங்களவை கொறடாவாக தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், இரு அவைகளின் பொருளாளராக கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோருக்கு பொறுப்பு மக்களவை-மாநிலங்களவை நிர்வாகிகள் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,DR ,Balu ,Dayanithimaran ,Lok Sabha-State Assembly Executives ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,DMK ,Lok Sabha-State Assembly ,Deputy Secretary General ,Kanimozhi Karunanidhi ,Parliamentary Committee ,Lok Sabha ,Rajya Sabha ,Treasurer ,Lok Sabha Committee ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் கண்கலங்கிய டிஆர். பாலு எம்பி